என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேத்தரின் தெரேசா
நீங்கள் தேடியது "கேத்தரின் தெரேசா"
எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.
பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.
அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.
கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.
நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.
ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.
மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.
நீயா 2 படத்தில் ஜெய்க்காக ராய் லட்சுமியும், கேத்தரின் தெரேசாவும் போட்டி போட்டு காதலித்திருக்கிறார்கள். #Neeya2 #jai #RaaiLaxmi #CatherineTresa
சர்வாவும் மலரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாயிருக்கிறாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள். அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்கு செல்கிறாள்.
அவன் இல்லாத அந்த ரூமையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர, மலர் ஒழிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள... மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி ஒரு காட்சியில், சர்வாவாக ஜெய், காதலி மலராக ராய்லட்சுமி, மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது.
இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார். அதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைத்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல், காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா? அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா? இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரேசா ஜெயித்தாரா? இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா 2. ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இப்படம் மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X